Sunday, September 21, 2008
இலத்திரன் பூங்கா
திரவப் பளிங்கு ஒளித்திரை
நரகத்தின் பெருஞ் சுவாலையைக் கக்கிற்று
வெண்கலக் குரல் ராட்சதன்
சம்மட்டியால் ஓங்கி அடித்ததில்
பூமி துண்டங்களாய் சிதற
விண்ணுலகின் வர்ண ஜாலங்களை ரசித்தபடி
சுக்கிரனில் அசைலம் கோரி நின்றிருந்தேன்
சக்கர நாற்காலியின்
முதுகுத்தடுப்பின் மேல் விளிம்பில்
மூக்கை அளுத்தியபடி
இரண்டடி மனிதன்
'வாப்பா கேம் ஓவர்'
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமையானதொரு கவிதையுடனேயே வலையுலகிற்குள் நுழைந்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
Post a Comment